2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பாக். தூதரக 2ஆவது அதிகாரியை வெளியேற உத்தரவு

Freelancer   / 2025 மே 22 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடைபெற்றது. இந்நிலையில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை கடந்த 13-ல் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணிநேரத்தில் வெளியேற மத்திய அரசு,  உத்தரவிட்டது.

அவர் தனது அந்தஸ்துக்கு ஏற்ற பணியில் ஈடுபடாமல் பிற பணிகளில் ஈடுபட்டதால், அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகையை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X