2025 ஜூலை 26, சனிக்கிழமை

பாடசாலை மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, மாணவனொருவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம், கடலூர் மாவட்டத்தில்  பஸ் நிலையம் அருகே உள்ள   நிழற்குடையின் கீழ் பாடசாலை சீறுடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவர்  ஒருவர் தாலி கட்டியுள்ளார்.

 இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். குறித்த வீடியோவில் மாணவனும் மாணவிக்கு தாலி கட்டுவதும்,  பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் நண்பர்கள் வீசுவதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X