2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பாடசாலையில் ஆடையை கழற்றி சோதனை; தீக்குளித்த மாணவி

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுள்ளது.

இதன்போது பரீட்சை எழுத வந்த மாணவியொருவர் பரீட்சையில் குளறுபடி செய்வதாகக் கருதிய ஆசிரியர் ஒருவர் அம் மாணவியை அறையொன்றுக்குள்  அழைத்துச் சென்று ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார்.

இதற்கு மாணவி எதிர்ப்புத்  தெரிவித்த போதும் ஆடையை கழற்றிச்  சோதனை செய்துள்ளார்.

 

இதனால் கடுமையான  மன உளைச்சலுக்குள்ளான குறித்த மாணவி

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதில், தீக்குளித்ததில் வலியால் மாணவி கதறி துடித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தபொலிஸார், குறித்த ஆசிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X