2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர்: பாட்டி மருத்துவமனையில்

Editorial   / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாட்டியிடம் இளைஞன் ஒருவன் முத்தம் கேட்டு தொந்தரவு செய்துள்ள சம்பவமொன்று சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச் சேர்ந்தவர்  கூலித் தொழிலாளியான இளைஞன் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த   மூதாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால், கேட்டது கிடைக்காத விரக்தியில் மதுபோதையில் இருந்த இளைஞன் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் கூச்சலிட்ட மூதாட்டியைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 தான், முழு போதையில் இருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் இளைஞன் பொலிஸாரிடம் கேட்டுள்ளார். எனினும், அவ்விளைஞனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X