Editorial / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் (Sergey Lavrov) கடந்த செவ்வாய்யன்று இந்தியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த லவ்ரோவ் அவருடன் இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தவகையில் குறித்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்துவது குறித்தும் இந்தியப் பிரதமர் மோடியின் மேக் -ன்- இந்தியா இனிசியேடிவ் (make-in-India initiative) திட்டத்தின் கீழ் அதிகளவு ரஷ்ய இராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சீனாவுடன் எந்தவித இராணுவ கூட்டணி ஒப்பந்தமும் மேற்கொள்ளும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .