A.K.M. Ramzy / 2021 மே 25 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தனியார் பள்ளியில் ஒன்லைன் வகுப்பில் மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்த வணிகவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபால் (59) என்பவர் மீது புகார் எழுந்தது. ஒன்லைன் வகுப்பில் துண்டு மட்டும் அணிந்து வகுப்பு எடுத்ததும், மாணவிகளுக்கு ஆபாச செய்தி அனுப்பியது, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப் பின் இன்று காலை மகிளா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஜூன் 8ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .