2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பாலியல் தொல்லை: வீட்டை விட்டு துரத்திய குடும்பம்

Editorial   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 வயதான மாற்றுத் திறனாளி பெண்ணொருவர் வீதியில் சுற்றி திரிந்துள்ளார். அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த பெண்ணின் நிலை குறித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹிரன் மங்க்ரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அப்பெண்ணை மீட்ட பொலிஸார்,  பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

வாய் பேச முடியாத அந்த பெண் காப்பகத்தில் தங்க விரும்பாமல் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது பெண் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது தான் அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் சைகை மொழி நிபுணரை வரவழைத்து விசாரித்த போது, அந்த பெண்ணை 4 ஆண்கள் பல்வேறு சமயங்களில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து பெண்ணின் பின்புலம் குறித்து விசாரித்து அவரது குடும்ப விவரத்தை காவல்துறையினர் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், பெண்ணின் தாயை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்துள்ளனர்.

 அப்போது தான் மேலும் அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது. அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான விஷயம் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஆனால் அவமானத்திற்கு பயந்து இதை வெளியே தெரிவிக்காமல் பெண்ணையும் வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக வாக்குமூலம் தந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X