2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பிட்புல், ரொட்வெய்லர் நாய்களுக்குத் தடை

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

`பிட்புல், ரொட்வெய்லர் மற்றும் டாகோ அர்ஜென்டீனோ` ஆகிய மூன்று வகை நாய்களைச் செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்க காசியாபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆக்ரோஷமான நாய் வகைகளில் பிட்புல், ரொட்வெய்லர் ஆகியவை அடங்கும். சமீப காலங்களாக இவ்  வகை நாய்களை இந்தியர்கள் அதிகளவில் வீட்டில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அவை குழந்தைகள், அவற்றின் உரிமையாளர் என பலரையும் தாக்கி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக அண்மையில் லக்னோவில் ஒரு பெண்ணை  பிட்புல் நாயொன்று கடித்து கொன்ற சம்பவம்  நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

மேலும் இந்த வகை நாய்கள் பத்து வயது சிறுவன் முதல் சாலையில் நின்றுக்கொண்டிருந்த பசுமாடு வரை தாக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் காசியாபாத் மாநகராட்சி குறித்த  மூன்று வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X