2025 ஜூலை 26, சனிக்கிழமை

பிரபல கட்சியின் சின்னம் முடக்கம்; தேர்தல் ஆணைக்குழு அதிரடி

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.

ஆனால் முதலமைச்சர்  பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பின்னர் கூட்டணி முறிந்தது. மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியைப்  பிடித்தது. 

இதனையடுத்து சிவசேனா தலைவர் ‘உத்தவ் தாக்கரே‘ முதலமைச்சர் ஆனதால் சிவசேனாவின்  மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித்  தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார்.

 இதனால் இதனால் சிவசேனா 2 அணியாக உடைந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு, சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அளித்தது. அதில்,‘ நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், எங்களுக்கு தான் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தர வேண்டும்‘ என்றும் கோரியது.

இம்மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தனர். 

இந்நிலையில்  கடந்த 4ஆம் திகதி ஷிண்டே தரப்பினரால்  மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு  மனுவொன்று கொடுக்கப்பட்டது.

அதில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை விசாரித்த தேர்தல் ஆணைக்குழு, அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

அத்துடன் இரு பிரிவினரும் விரைவில் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களைத் தெரிவு  செய்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு  அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X