2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

புதிய அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இடமில்லை

A.K.M. Ramzy   / 2021 மே 20 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்:

'கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு, புதிய அமைச்சரவையில் இடம் அளிக்காதது, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியில் கட்சி எடுத்த முடிவு. இதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தெரிவித்துள்ளது.

கேரளாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவி ஏற்கிறார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளோர் பட்டியலை கட்சி தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் இடம் பெற்ற 12 பேரில், முதல்வர் பினராயி விஜயனை தவிர மற்ற அனைவருமே புது முகங்களாக உள்ளனர்.

கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷைலஜா, கொரோனா முதல் அலையின் போது சிறப்பாக செயல்பட்டதாக மக்களின் பாராட்டை பெற்றார்.அவரது தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பாராட்டு தெரிவித்தது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இடம் அளிக்கப்படாதது, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வலியுறுத்தி, பல்வேறு துறை பிரபலங்கள், பொது மக்கள் உள்ளிட்டோர், சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .