2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பெண் மீது தொடர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நால்வர் கைது

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில், ஐவரால் தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு  உத்தரபிரதேசம் காசியாபாத்தில் கடத்தப்பட்டு,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி, குறித்த பெண் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புவதற்காக இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.

அப்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணைக்  கடத்திச் சென்று  2 நாட்களாக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் குறித்த பெண்ணின்  பிறப்புறுப்பில் இரும்பு கம்பியொன்றை சொருகிய நிலையில் ஆஷ்ரம் சாலை பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணை மீட்டு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில்  நால்வரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், எஞ்சிய ஒரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் குறித்த ஐவரும்  அப்பெண்ணுக்கு பழக்கமானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X