2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறிக் குதித்த இளைஞர்களால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியொன்றில் கடந்த 14 ஆம் திகதி தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத் தினத்தன்று கூட்டம் அதிகரித்ததைத்  தொடர்ந்து குறித்த  பெண்கள் கல்லூரியின் நுழைவு வாயில் மூடப்பட்டது.

இதனையடுத்து ஆண் மாணவர்கள் சிலர் குறித்த கல்லூரியின் சுவரின் மீது  ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அத்துடன் ஆபாச கோஷங்கள் எழுப்பி முகம் சுழிக்கும் வகையிலும்  நடந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள்  சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில்  இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X