2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்   சோமண்ணா மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவொன்று  நடைபெற்றுள்ளது. 
 
இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது அவரிடம் ஒரு பெண்,  குறைகளை சொல்ல முயன்றதாகவும், அச் சந்தர்ப்பத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால்  அப்பெண், அமைச்சர்  சோமண்ணா மீது விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சற்றும் எதிர் பாராத அமைச்சர்  ஆத்திரம் அடைந்து ,  அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
இந்நிலையில் கர்நாடக ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இவ்விவகாரம் குறித்து குண்டலுபேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X