2025 ஜூலை 23, புதன்கிழமை

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு 5 கோடி ரூபாய்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில், மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம்,  கடந்த ஒக்டோபர் மாதம்  30ஆம் திகதி  திடீரென இடிந்து விழுந்தது.

இவ்விபத்தில் குழந்தைகள் உட்பட 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முழு இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய இவ்விபத்துத்  தொடர்பில் இதுவரை 9 பேர் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேரையும் இழந்த 20 குழந்தைகளின் நலனுக்காக 5 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

அந்தவகையில் மொத்தமாக  20 குழந்தைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .