2026 மே 04, திங்கட்கிழமை

பேரறிவாளனின் தாய் முதல்வருக்கு வேண்டுகோள்

A.K.M. Ramzy   / 2021 மே 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சென்னை

பேரறிவாளனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.    

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்திலுள்ளது. இந்நிலையில் நாடெங்கும் கொரோனா இரண்டாவது பரவல் அலை அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுப் பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்படின் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயமும், அப்படித் தொற்று ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அற்புதம்மாளின் ட்விட்டர் பதிவுசெய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .