2025 ஜூலை 23, புதன்கிழமை

போராடிய இரு பெண்களையும் உயிருடன் புதைக்க முயற்சி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 10 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

`நிலத்துக்காகப் போராட்டம் நடத்திய இரு பெண்களை, மூவர் உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்திலேயே  இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த தாலம்மா,சாவித்திரி ஆகியோருக்குச் சொந்தமான காணியை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமது காணியைத்  திரும்ப தரக் கோரி இரு பெண்களும் அண்மையில் குறித்த காணியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய மூவரும்  டிராக்டர்களில் மண்ணை அள்ளி வந்து அவர்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மண்ணில் புதைக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போராடி மீட்டுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி  வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .