2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மகனால் மனைவியைக் கொன்ற கணவர்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் தனது மகன் மீது கொண்ட ஆத்திரத்தால், மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், இந்தூர் நகரில் வசித்து வருபவர் ‘ஹீராலால்‘. பாதுகாவலராகப்  பணிபுரிந்து வரும் அவருக்கும், அவரது மகனுக்கும் அண்மையில் வாக்குவாதமொன்று  ஏற்பட்டுள்ளது.

இதனை கவனித்த லாலின் மனைவி, இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது அவர் தனது மகனுக்கு ஆதரவாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஹீராலால், தன்னிடமிருந்த ரைபிள் ரக துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கிச் சுட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் லாலின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லாலை  கைது செய்துள்ளதோடு, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X