Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 10 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில், தடை உத்தரவை மீறி திங்கட்கிழமை (9) நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது.
இதன் ஒரு கட்டமாக, இம்பால் கிழக்கு மாவட்டம் யாய்ரிபோக் துலிஹலில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் கட்டிடத்தின் ஒருபகுதி சேதம் அடைந்தது. அரசு கோப்புகள் எரிந்து சாம்பலாகின. கலவரக்காரர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இம்பால் மேற்கு மாவட்டம் குவாகிதெல், சிங்ஜமேய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன.
அதனால், பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.
பல சாலைகளில் மூங்கில் கம்புகளால் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தினர்.
இருப்பினும், இம்பால் விமான நிலையம் செல்லும் வீதி உள்ளிட்ட சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன. பெண்கள் குழுக்களும் போராட்டத்தில் இணைந்தன. குராய் என்ற இடத்தில் அவர்கள் டார்ச்லைட் ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.
மணிப்பூரில் மாற்று அரசு அமைக்கக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணிப்பூரில் மீண்டும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago