Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில பொலிஸாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. புகைபடங்கள் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், புகைப்படங்களில் பிணமாக கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம் இவர்கள் காணாமல் போனவர்கள் என தெரியவந்தது.
ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைபடங்கள் வெளியாகி மணிப்பூரை மீண்டும் அலற வைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago