2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

மதனின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல யூடியூபரான மதன் தனது யூடியூப்  பக்கத்தின் மூலம்  "சிறுவர்களைத் தவறான பாதைக்குத்  திசை திருப்பியமை மற்றும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியமை" உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அண்மையில்,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது ‘இவரது யூடியூப் பக்கத்தினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதாகவும், அதில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்தது.

குறிப்பாக  ‘ஒன்லைன் வகுப்புக்களில் கலந்து கொள்வதாகக் கூறி, மதனுடன் ஒன்லைன் விளையாட்டில் மாணவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், மதனின் ஆபாச பேச்சுக்கள், பெண்களை இழிவுபடுத்திப் பேசும் வார்த்தைகள் தவறு என்று உணராத 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகவும்‘ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேலும் மாணவர்களது எதிர்காலத்தை பாழாக்கும் என்பதை உணர்ந்துதான் உடனடியாக மதனின்  யூடியூப் பக்கமானது  முடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் யூடியூபில்  பப்ஜி  போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதை  நிறுத்திவிட்டு, பாடங்களில் கவனம் செலுத்துமாறு  மாணவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .