A.K.M. Ramzy / 2021 மே 31 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

கும்மிடிப்பூண்டி
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பாடசாலைகள் ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் இணையம், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையை மறந்துவிட்டனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிமாணவர்கள் சுமார் 100 பேருக்கு,தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள்,வார்த்தைகள் உள்ளிட்டவற்றை வீடுகளின் சுவர்களில் எழுதி ஞாபகப்படுத்துகின்றனர்.
அவர்கள் வீதிகள்தோறும் சென்று,வீடுகளின் சுவர்களில் தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தைகள், தலைவர்களின் பொன்மொழிகள், திருக்குறள் உள்ளிட்டவற்றை எழுதி, பள்ளி மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் சுவர்களில் எழுதி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்த செயலை, பெற்றோர், பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
2 minute ago
17 minute ago
25 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
17 minute ago
25 minute ago
52 minute ago