2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

மதுக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 13 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை

 தமிழகத்தில் மீண்டும்   மதுக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பாரதிய ஜனதாவினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழக அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்தது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி,சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில்  நாளை திங்கட்கிழமை முதல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என தமிழகம் அறிவித்தது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'மதுக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்' என எதிர்த்து பா.ஜ., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  

சென்னை திநகரில் எல்.முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது முருகன் கூறியதாவது:

மதுக் கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சியில் இல்லாத ஒரு நிலை. ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதலமைச்சர்  செயல்படுகிறார்.   இவ்வாறு அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .