A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி
''நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசால் கவனமாகக் கையாள முடியவில்லை. தடுப்பூசியைக் கண்டுபிடித்து, அதை மக்களுக்குப் போதுமாக கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட வைத்துள்ளார்கள்'' என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் 2ஆவது அலை நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.45 இலட்சம் பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago