2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி;அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 22 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்மையில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இவ் ஆட்டுக்குட்டியின் முகம் முழுவதும் ரோமங்கள் இருந்தாலும் இதன் கண்கள் அமைந்துள்ள விதம் மனித முகத்துடன் ஒத்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் அதன் கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையமும்  மனிதர்களுக்கு இருப்பது போலவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ”மருத்துவ ரீதியில் இதனை டிஸ்பெஸியா என அழைப்பதாகவும் இது மிகவும் அரியதாக ஏற்படக்கூடிய நிகழ்வு எனவும் 50,000 விலங்குகளில் ஒன்றுக்கே இவ்வாறு  மனித முகம் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ”பெரும்பாலும், ஆடுகளிலேயே இவ்வாறு நடப்பதாகவும், மூளையில் அதிகப்படியான திரவம் சுரப்பதால் ஏற்படும் வீக்கமே இதற்குக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020ஆம்  ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா என்ற கிராமத்தில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்றை மக்கள் வணங்கி வந்தமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .