Freelancer / 2024 ஜூன் 14 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இணையம் மூலம் வாங்கிய கோன் ஐஸ்கிரீமில் மனித விரலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள மாலட் என்ற நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் இணையம் மூலம் கோன் ஐஸ்கிரீம் ஓர்டர் செய்துள்ளார்.
இந்நிலையில், பார்சல் வந்த போது அதனை பிரித்து பார்த்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஐஸ்கிரீம் மேல் மனித விரல் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அந்த பெண் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், பொலிஸிலும் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஐஸ்கிரீம் மற்றும் விரலை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S
10 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
2 hours ago