Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம்மனைவியை, கஞ்சாவுக்கு அடிமையான கணவன் செய்த சித்ரவதையை கேட்டு மத்திய பிரதேச மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். என்ன நடந்தது? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது.
இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது. இதற்கு அடுத்தபடியாக உள்ளது மத்திய பிரதேசம். இப்படி வடமாநில பெண்களின் நிலைமை நாளுக்குநாள் பரிதாபத்தை கூட்டிவருகிறது.
கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு, இதே மத்திய பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்தது. சிங்க்ராலி மாவட்டத்தில் மடா என்ற கிராமம் உள்ளது. இங்கு 55 வயதான நபர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு 35 வயதாகிறது.மனைவியின் நடத்தை மீது அந்த கணவனுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது.
அதே ஊரில் உள்ள ஒருவரோடு மனைவிக்கு கள்ள உறவு இருப்பதாக கணவனுக்கு சந்தேகம் மண்டைக்கு ஏறி, நிறைய தகராறு செய்து வந்துள்ளார். இதையே சாக்காக வைத்து, மனைவியை அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று அந்த பெண் தினந்தோறும் கதறியும், கணவன் கேட்கவில்லை. அப்படித்தான் சம்பவத்தன்றும் தகராறு வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கயிறுகளால் இறுக கட்டிப்போட்டார். பிறகு ஒரு ஊசியை எடுத்து வந்து, மனைவியின் அந்தரங்க உறுப்பு பகுதியை தைத்து விட்டார்.
அதற்கு பிறகும் ஆவேசம் குறையாமல், மனைவியை ஒரு ரூமில் போட்டு அடைத்து கொடுமைப்படுத்தினார்.அந்த பெண் வேறுவழியில்லாமல் அங்கிருந்து தப்பி வந்து அருகிலுள்ள ஸ்டேஷனில் கணவன் மீது புகார் கொடுத்தார். புகாரையும் தந்துவிட்டு, போலீஸாரிடம் என்ன சொன்னார் தெரியுமா? "என் புருஷனை கைது செய்ய வேண்டாம், நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, வேணும்னா அவரை நல்லா திட்டுங்க சார்" என்றாராம்..ஆபத்தான நிலைமையிலும், ஒரு பெண் கணவனுக்காக இப்படி பரிந்து பேசியதை பார்த்து பொலிஸார் திகைத்தனர்.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025