2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மனைவியை சங்கிலியில் கட்டிவைத்து கணவனும், நண்பனும் வன்புணர்வு

Editorial   / 2022 ஜூலை 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பெண்ணொருவரை அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் 35 வயதான பெண்ணொருவ​ரே கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவர்களுக்குச் சந்தேகம் வரவே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸாரின் விசாரணையில்  பல்வேறு அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகின.

  பெண்ணுக்கு அவரது கணவருக்கும் இடையே சண்டை கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இது முற்றிய நிலையில், அவரது கணவர் கடந்து இரண்டு ஆண்டுகளாக கொடூரமான முறையில் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

மனைவியை அவரது விருப்பத்தை மீறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்தரங்க உறுப்புகளில் கடுமையாக தாக்கவும் செய்துள்ளார். அத்துடன் நிற்காமல் மனைவியை சங்கிலியில் கட்டி வைத்து அவரும் சென்னையை சேர்ந்த கணவரின் நண்பரும் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை செலுத்தி துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமைகளை செல்போனில் படம் பிடித்து வெளியே விட்டுவிடுவோம் எனவும் பிளாக் மெயில் செய்துள்ளார். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் பொறுத்த வந்த அந்த பெண் கடுமையான உடல் நலன் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

பெண்ணின் வாக்குமூலத்தை பெற்ற நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான கணவரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X