2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின்  மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், (வயது 88) உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டொக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மன்மோகன்சிங் கடந்த 2009ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்திப் பதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛டொக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .