Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 12 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி பழங்குடியினர், கால்நடை வளர்ப்பில் சிக்கல்களை எதிர்கொண்டனர். குறிப்பாக அதிக இறப்பு வீதங்கள் கடும் பிரச்சினையாக அமைந்தது.
தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில், மழைக்கு முன்னர், நாட்டு கோழிகளை விற்பனை செய்து வந்த அவர்களின் நிலை இந்த ஆண்டில் மாறியுள்ளது என்று, மத்திலி பிளாக்கில் உள்ள புலப்பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த அனில் கிர்சானி, 101 சேவையின் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கைர்புட் தொகுதியில் உள்ள சிரிபேட்டா, பனிகட்டா மற்றும் பாங்க்டிகுடா கிராமங்களில் ராணிகேட் (புதிய கோட்டை நோய்) நோயினால் கோழிப் பண்ணைகள் மற்றும் கால்நடைகள் முழுமையாக அழிந்தன.
2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, 58 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையுடன் போராடும் மாவட்டத்தில் பழங்குடியினரின் வருமானம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
கோழிகளை காப்பாற்ற தடுப்பூசிகள் மட்டுமே ஒரே வழி என்றாலும், விவசாயிகள், 80 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்துக்கு சென்று பதிவு செய்யாத முகவர்களிடம் இருந்து பறவை ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபாய்க்கும் ஆடு ஒன்றுக்கு 100 முதல் 120 ரூபாய்க்கும் தடுப்பூசியை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.
கால்நடைகளின் மரணத்தை கையாள்வதில் உள்ளூர் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒடிசா அரசாங்கத்தின் இரண்டு வருட முன்னோடித் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியில் இயங்கும் தடுப்பூசி குளிரூட்டிகள், மத்திலி மற்றும் கைர்புட் தொகுதிகளுக்கு 2022 ஜனவரியில் வழங்கப்பட்டன.
1 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த தொகுதியானது, சோலார் பனல்கள், ஒரு குளிர்சாதன பெட்டி, வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல ஒரு சிறிய குளிர் பெட்டி மற்றும் ஏனைய அத்தியாவசிய உள்ளீடுகளை கொண்டுள்ளது.
ஒவ்வொரு குளிர்சாதன பெட்டியிலும் 100 லீற்றர் வரையான பல்வேறு தடுப்பூசிகளை சேமிக்க முடியும் என்பதுடன், மின் தடை ஏற்பட்டால், 24 முதல் 30 மணி நேரம் வரை குளிர்ச்சியை பராமரிக்க முடியும் என்றும் கைர்புட் பிளாக் கால்நடை வைத்தியர் துஷார் மிஸ்ரா குறிப்பிட்டார்.
ஒழுங்கற்ற மின்சாரம் மற்றும் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் இல்லாததால், தொலைதூரக் குடியிருப்புகளுக்கு வழங்கும் தடுப்பூசி செயல்திறனைக் குறைப்பதால், இந்த செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான கால்நடை நிறுவனங்களை நடத்தும் இரண்டு விவசாயிகளின் வீடுகளில் சோலார் பேனல்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட்டு, அதிலிருந்து ஜனவரி மாதம் பயிற்சி பெற்ற 40 பழங்குடியின இளைஞர்களுக்கு தடுப்பூசி குப்பிகள் வழங்கப்பட்டன.
பண்ணை விலங்குகளை எவ்வாறு நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது என்பது குறித்து, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை வைத்திய சேவைகள் திணைக்களத்தால் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
உள்ளூர் விவசாயிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழிக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு திணைக்களத்தால் குளிர்பதனக் கிடங்குகள் கையளிக்கப்படுகின்றன.
ஓர் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமும் அமைப்பின் சீரான இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுப்பூசிகளுக்கு அப்பால், கோழிகளை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க, முயற்சித்து சோதிக்கப்பட்ட உள்ளூர் கலவைகளைப் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்
நிலையான விவசாயம் மற்றும் கால்நடை முகாமைத்துவத்துக்காக இயற்கை மற்றும் செலவு குறைந்த முறைகளை ஊக்குவிப்பதற்காக, உள்ளூர் சமூகங்கள் பல்வேறு மூலிகைகள், வேர்கள், இலைகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றன என்று கால்நடை வைத்தியரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருதைப் பெற்றவருமான பலராம் சாஹு குறிப்பிட்டார்.
33 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago