2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மாணவி கூட்டு பலாத்காரம்; 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அட்டூழியம்

Freelancer   / 2022 ஜூலை 08 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருபாலரும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த (22) அன்று அதே பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் சில மாணவர்களும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் அந்த மாணவனுடன் மாணவி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பள்ளி மதிய உனவு இடைவெளியின் போது அந்த மாணவியை சக மாணவன் (வயது 15) உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வா என்று அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு உள்ளே மாணவி சென்றவுடன் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளான்.

அப்போது அந்த வீட்டின் உள்ளே தன்னுடன் படிக்கும் மாணவன் இருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

அதனை அந்த வீடியோவை முன்னாள் மாணவனான நண்பனுக்கும் (வயது 17) அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று தாயிடம் கூறியுள்ளார். அதற்கு அவருடைய தாய் காரணம் கேட்டதற்கு நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தி, மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும், புகைப்படத்தை அனுப்பிய முன்னால் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இரண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .