2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை

Editorial   / 2022 ஜூலை 19 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17ஆம் திகதியன்று நடைபெற்றது.

கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த தேர்வில் மாணவிகளுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் கேரளா மாநிலம் கொல்லத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் தேர்வு கூட ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.

 மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவிகளை ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர்.  பல மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றியும் சோதனை நடத்தியுள்ளனர். இதனால் மாணவிகள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் வேதனை பட்டனர்.

மாணவியொருவர் செய்துள்ள முறைப்பாட்டில்,  என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர். என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X