Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று, குறித்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் எனவும், இதனைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவர் அம்மாணவியைப் பலாத்காரம் செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவியின் இளைய சகோதரி பயிற்சி வகுப்பிலிருந்து வீடு திரும்பிய போது, ஜன்னல் வழியாக நடந்தவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அம்மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் இது குறித்து தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
45 minute ago
48 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
48 minute ago
4 hours ago