2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மாதவிடாய் காலத்தில் மரக்கன்று நட எதிர்ப்பு

Editorial   / 2022 ஜூலை 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதவிடாய் கால மாணவிகளை மரக்கன்று நடுவதை ஆசிரியர் ஒருவர் தடுத்த வினோத சம்பவம் நாசிக் அருகே நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாசிக் மாவட்டத்தில் மாணவிகள் தங்கி படிக்கும் உண்டு உறைவிட பாடசாலை உள்ளது. இங்கு சுமார் 500 மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு பயிலும் பழங்குடியின மாணவி ஒருவர் ஷிராம்ஜீவி சங்காதானா அமைப்பின் மூலம் பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

  எங்களது உறைவிட பள்ளியில் கடந்த வாரம் மரக்கன்று நடும் முகாம் நடந்தது. இதில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் மாணவிகள் மரக்கன்றுகளை நட வேண்டாம் என்று எனது வகுப்பு ஆசிரியர் கூறினார். கடந்த ஆண்டு மரக்கன்று முகாம் நடந்தபோது மாதவிடாய் கால மாணவிகளால் மரக்கன்றுகள் வளராமல் கருகி போனதாக கூறி, எங்களை விலகி இருக்குமாறு கூறினார். இதனால் நான் உள்பட சில மாணவிகள் மரக்கன்று நடுவதில் இருந்து தடுக்கப்பட்டோம்.

அவ்வமைப்பின் நாசிக் மாவட்ட செயலாளர் பகவான் மாதே கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவியால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை எதிர்க்க முடியவில்லை. காரணம், அவர் மாணவியின் வகுப்பு ஆசிரியர். மேலும் பாடசாலை மூலம் வழங்கப்படும் 80 சதவீத மதிப்பீட்டு மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்று அந்த ஆசிரியர் மாணவியை மிரட்டி உள்ளார். இருப்பினும் மாணவி எங்களை அணுகியதை தொடர்ந்து முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X