2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மாமியாரிடம் மருமகள் கைவரிசை

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம்பெண் ஒருவர், தனது மாமியாரின்  வீட்டில் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும்  பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைலாஷ் பகுதியைச் சேர்ந்த வரீந்தர் மிஸ்ரா. இவரது  இளைய மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்(18) மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மருமகளின் நண்பர்கள் இருவர், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியுள்ளதோடு, அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X