A.K.M. Ramzy / 2021 ஜூன் 13 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருக்கிறதெனத் தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இப்போது அரசாங்க ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஒக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே மூன்றாவது அலை வந்தாலும் அச்சப்படத்தேவையில்லையெனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு நேற்று மாலை மூன்று இலட்சம் அறுபத்தி ஐயாயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன.
இங்கிலாந்தில் மூன்றாவது அலை உருவாகி தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் வந்ததால், தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலை வரும் என சொல்லப்படுகிறது. அது நடக்காமல் இருந்தால் நல்லது.
இதுவரை ஆயிரத்து 299 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago