2026 மார்ச் 07, சனிக்கிழமை

யாஸ் புயலை எதிர்கொள்ள ஏற்பாடு

A.K.M. Ramzy   / 2021 மே 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா

 வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலை எதிர்கொள்ளும் தயார் நிலை குறித்து ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம் முதல்வர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி மூலம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

 புயல் பாதிப்பு மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த அமித்ஷா, அனைத்து கொவிட்-19 மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளில் மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்கள் வசதிகளுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் வலியுறுத்தினார்.

புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மருத்துவமனைகளில், அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்கவும் அவர் வலியுறுத்தினார்.

புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் இதர முகாம்களில் உள்ள நோயாளிகளை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் போதிய ஏற்பாடுகளை செய்யும்படி அவர் வலியுறுத்தினார். டவ்தே புயலின் போது மேற்கு கடலோர பகுதியில் இது போன்ற ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டதால், எந்த மருத்துவமனையிலும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .