Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூன் 29 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
'அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ரஜினி மட்டும் சிகிச்சைக்காக சென்றது மர்மமாக உள்ளது' என, நடிகை கஸ்துாரி கூறியுள்ளார்.
'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட ரஜினி, இதற்காக மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. சில வாரம் ஓய்வுக்கு பின், இந்தியா திரும்ப உள்ளார்.
இந்நிலையில், ரஜினி அமெரிக்கா சென்றது குறித்து, நடிகை கஸ்துாரி, 'டுவிட்டரில்' கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: கொரோனா காரணமாக, இந்தியர்கள், மே மாதம் முதல் நேரடியாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி இந்த நேரத்தில் ரஜினி பயணம் செய்தார்? அவர் அரசியலில் இருந்து விலகியது உள்ளிட்ட எதுவும் சரியாகப்படவில்லை. இதை ரஜினி தான் தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிப்பவர்கள் மட்டும், அமெரிக்கா திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியே தான் அனுமதி கிடைக்கிறது.
இந்தியாவில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில், ரஜினிக்கு சிகிச்சை தர முடியாத அளவுக்கு என்ன பாதிப்பு உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago