Mithuna / 2024 ஜனவரி 09 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்திகதி நடைபெற இருக்கிறது. 16-ந்திகதி முதல் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
இதற்கு முன்னதாக 17-ந்திகதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026