2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ரூபாய் நோட்டு மூலமாக பிளவுக்கு வழிசமைக்காதீர்

Editorial   / 2022 நவம்பர் 03 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை புதுடெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  முன்வைத்து உள்ளனர்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றன.

அதில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே என்று கூறியிருக்கிறார்.

மராட்டிய மாநில பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றம் ஏற்படுமா? என்பது குறித்து மக்கள் கருத்துகள் பின்வருமாறு:-

 பெங்களூரு காந்தி நகர் வார்டு பிளாக் காங்கிரஸ் தலைவரான சரவணா, "ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் உள்ள சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

 இந்தியா பல சாதி, மதங்களை கொண்ட ஒற்றுமையான நாடு. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிடுவது தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தும். இதன்மூலம் மக்களிடம் ஒற்றுமை சீர்குலையும். நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரூபாய் நோட்டு மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி வேண்டாம்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X