2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

லேண்டர், ரோவர் செயல்படும் வாய்ப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது. பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே அமைப்புகள் 14 ஆவது நாளில் கூட எழுந்திருக்கலாம். அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கெனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X