2025 ஜூலை 26, சனிக்கிழமை

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தில் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில், அண்மையில்  5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை, உள்ளாடையுடன்  வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி அழுக்கடைந்த சீருடையுடன் வகுப்பறைக்கு வந்தார் எனவும், இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சக மாணவர்கள் முன்னினையில் அவரது சீருடையை அகற்றுமாறு கூறியதாகவும், அதன் பின்னர் அவ்ஆடையை நன்றான நீரில் அலசி காயவைக்குமாறும் உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ‘அச்சிறுமியை உள்ளாடையுடன் 2 மணிநேரத்திற்கு அவ்வகுப்பறையில் அமருமாறு கூறியதாகவும், பின்னர் அவரைப் புகைப்படமெடுத்து பழங்குடியின நலத்துறை அதிகாரிகளின் வட்ஸ்அப் குரூப்பில், பதிவிட்டு தன்னை தானே 'சுத்தத்திற்கான தன்னார்வலர்' என்று குறிப்பிட்டுள்ளார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதையடுத்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும், இது குறித்து உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X