Freelancer / 2025 ஜூன் 03 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் அடைமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 இலட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர்.
மணிப்பூரில் 19,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் சுமார் 5,000 வீடுகள் இடிந்துள்ளன. திரிபுராவில் சுமார் 10,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மிசோரமின் மலைப் பகுதிகளில் 211 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிசோரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமன்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடைமழை பெய்து வருகிறது.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago