A.K.M. Ramzy / 2021 மே 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பொலிஸ் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் குழுவினர் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை வேப்பேரி பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் குழுவினரால் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்படடுள்ளதாவது; தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
அதில், ‘முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில், நாங்கள் தாயில்லாத பிள்ளைகள். எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அப்படி எங்கேயும் கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவதூறு கருத்துகளை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .