Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ உணவு நன்றாக இல்லை‘ எனக் கூறிய வாடிக்கையாளர் மீது உணவக உரிமையாளர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் ஒடிசாவில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிசந்திரப்பூர் கிராமத்தில், வசித்து வருபவர் பிரசன்ஜித் பரீடா.
இவர் உள்ளூர் சந்தையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட உணவு சுவையாக இல்லை என உணவக உரிமையாளர் பிரவாகர் சாஹூவிடம் முறையிட்டு உள்ளார்.
அத்துடன் உணவின் விலை பற்றியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, உணவு சரியில்லை என கூறியதற்காக ஆத்திரத்தில் இருந்த சாஹூ, இதனால் மீண்டும் கோபமடைந்து உள்ளார்.
இதனால், திடீரென கொதிக்கும் எண்ணெய்யை பரீடாவின் மீது ஊற்றியுள்ளார். இச் சம்பவத்தில் பரீடாவின் முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்துப் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago