Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 25 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டேராடூனில் தோன்றிய வானவில் போன்ற அரிய சூரிய ஒளிவட்டம் பார்ப்போரை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சூரிய ஒளிவட்டம் அவ்வப்போது வானில் தோன்றுவது ஒரு நிகழ்வு. சூரியனைச் சுற்றி வட்டமிட்டது போன்று ஒரு ஒளிவட்டம் தோன்றும். இதேபோல் நிலாவைச் சுற்றியும் இந்த வட்டத்தை எப்போதாவது நம்மால் பார்க்கமுடியும். ஆனால் அந்த ஒளிவட்டமே வானவில்லை போன்று தோன்றும் நிகழ்வு என்பது மிகவும் அரிதானது.
நேற்று (24) மதியம் டேராடூனில் வசிக்கும் மக்கள் சூரிய ஒளிவட்டத்தின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதில் முழுவட்ட வானவில்லை போன்று சூரியனைச் சுற்றி தோன்றிய ஒளிவட்டம் பார்ப்போரை கவர்ந்திருக்கிறது.
ஒளிவட்டம் சூரியனை அல்லது சந்தினைச் சுற்றி தோராயமாக 22 டிகிரி ஆரத்தில் வானவில் போன்று தோன்றுகிறது. வளிமண்டலத்திலுள்ள லட்சக்கணக்கான அறுகோண பனி படிகங்களில் சூரிய ஒளிவிலகல் காரணமாக இது நிகழ்கிறது என்று வானிலை மைய இயக்குனர் பிக்ரம் சிங் கூறியுள்ளார்.
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago