A.K.M. Ramzy / 2021 மே 26 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களான 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டர்கிராம்' போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகளை மத்திய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. 'விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய விதிகளை ஏற்பதற்கான கெடு நேற்றுடன் (மே 25) முடிவடைந்தது. இதனால், விதிகளை ஏற்காத நிறுவனங்களின் வலைதளங்கள் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை தாங்கள் மதிப்பதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தியாவின் சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.
13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago