Freelancer / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 3 நாள்களில், இந்தியாவில் 12 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறுவன் ஒருவன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரை சேர்ந்த நிர்பன் ஃபஸ்லுதீன் (வயது 33) என்பவரும் 17 வயதான சிறுவன் ஒருவருமே, இவ்வாறு கைது செய்யப்படுள்ளதாக, மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவன், கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து, அதன் ஊடாகவே சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்த்திருத்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago