A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விவேக்கின் பிறந்தநாளும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளும் நவம்பர் 19ஆம் திகதி.இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது, சிறுவனாக இருந்த விவேக்,
தனது பிறந்த நாள் அன்று, பிரதமருக்கும் பிறந்த நாள் என்பதால் விவேக் ஒரு வாழ்த்து கடிதத்தை இந்திரா காந்திக்கு அப்போது அனுப்பி இருந்தார்.
அதில், அவர் ஆங்கிலத்தில், ‘மை பெர்த் டே, யுவர் பெர்த்டே சேம்... பெர்த்டே, ஐ விஷ் யூ... யூ விஷ் மீ’என்று எழுதி இந்திராகாந்திக்கு அனுப்பியுள்ளார்.
அதைப் படித்து பார்த்த இந்திரா காந்தி, சிறுவனாக இருந்த விவேக்குக்கு பதில் அனுப்பினார்.
அந்தப் பதில் கடிதம் தபாலில் வரவில்லை. மாறாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் என்பதால் கலெக்டரும் தனிப்பட்ட கவனம் எடுத்து, அந்த கடிதத்தை சம்பந்தப்பட்டவரிடம் கொண்டு நேரடியாக சேர்க்கும்படி உத்தர விட்டார்.
விவேக் வீடு குன்னூர் மலைப்பகுதியில் இருந்ததால் குதிரை ஜவான் அந்த கடிதத்தை கொண்டு சேர்த்தார். விவேக் வீட்டுக்கு அவரைத் தேடி குதிரை ஜவான் வந்ததை அறிந்ததும், உடனே பயந்து அவர் ஆப்பிள் தோட்டத்தில் ஒளிந்து நின்றிருந்தாராம். வெளியே வரவில்லையாம். பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பது, விவேக்குக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பிரதமர் இந்திரா காந்தி அனுப்பிய கடிதம் என தெரியவந்ததும், விவேக்கின் தாயார் தேடிச் சென்று விஷயத்தை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.
இந்த தகவலை தந்தி டி.வி. நிகழ்ச்சியில் விவேக் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தை தனது அலுவலகத்தில் பத்திரமாக வைத்து இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் கூறி இருக்கிறார்.
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago