2026 மார்ச் 07, சனிக்கிழமை

வீட்டிலேயே அன்டிஜன் பரிசோதனை

A.K.M. Ramzy   / 2021 மே 20 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடில்லி

 கொரோனாத் தொற்றை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் 'ரேபிட் அன்டிஜன் டெஸ்ட்' பரிசோதனைக் கருவியை  பயன்படுத்துவதற்கு இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை விரைந்து கண்டறியும் 'ரேபிட் அன்டிஜன் டெஸ்ட்' என்ற கருவியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஒரு பரிசோதனை கருவியின் விலை 250 ரூபாய். 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். இக்கருவியின் பயன்பாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளித்துள்ளது.

மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து சுய பரிசோதனை மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருவியின் பரிசோதனையை எல்லோரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது.

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .