2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வீராங்கனையின் உயிரைப் பறித்த வைத்தியசாலை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 சென்னை வியாசர்பாடியைச்  சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர் சென்னையில் உள்ள கல்லூரியொன்றில் 1 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது காற்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர், தேசிய அளவிலான காற்பந்துப்  போட்டிகள் பலவற்றில்  கலந்து கொண்டு பல சாதனைகளைப் படைந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் காற்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதித்துப் பார்த்ததில் அவரது  காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது  தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வேறொரு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்துள்ளது. எனினும் அவருக்கு கால் வலி குறைவடையவில்லை என்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத்  தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ”அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியமையே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமெனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ”மாணவி பிரியா அரச மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சயின் தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் ”திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் ஒவ்வொரு அரச துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது” எனவும்  தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .